பிள்ளைகளால் பிச்சை எடுத்த பள்ளி ஆசிரியை - உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்

திங்கள், 16 ஜூலை 2018 (10:22 IST)
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஆசிரியையை, மாணவர்கள் மீட்டு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலக் கட்டங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பெரும்பாடு பட்டு வளர்க்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, வீட்டு வாடகை, கரண்ட் பில், மளிகை செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு என கஷ்டப்பட்டு தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குகின்றனர். ஒரு சில பிள்ளைகளோ நல்ல நிலைக்கு வந்த பின்னர், பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். 
 
அப்படித் தான் கேரளாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர், பிள்ளைகளால் கைவிடப்பட்டு பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தி வந்தார். ரோட்டில் குப்பைத் தொட்டியில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரை, பெண்மணி ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
ஏனென்றால் அந்த மூதாட்டி அந்த பெண்மணியின் பள்ளி கணக்கு ஆசிரியர். உடனடியாக அவரிடம் சென்று அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். இந்த தகவலை தனது நண்பர்களுக்கு பகிர்ந்தார் அந்த பெண்.
 
உடனே அந்த மூதாட்டியின் முன்னாள் மாணவர்கள், வந்து அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும், தன்னால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் தன்னை கைவிடவில்லை என கூறி அழுதார் அந்த முன்னாள் ஆசிரியை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்