100 % தேர்ச்சி.. மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்! - அன்பில் மகேஸ் அசத்தல் அறிவிப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:12 IST)

தமிழக அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்துதல், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல் உள்ளிட்டவற்றிற்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

தற்போது கோடை விடுமுறை நடந்து வரும் நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி, அரசு பள்ளிகளில் பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்’ ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.19 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கோள்ளப்படும். பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத்தேடல் மேம்படுத்தப்படும்.

 

கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ‘கலைச்சிற்பி’ என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும். 

 

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர் சேர்க்கயை அதிகப்படுத்தும் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். 

 

13 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். அரசின் துறைத் தேர்வுகளுக்கு உதவும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூல்கள் வெளியிடப்படும். நூலக கட்டிடங்கள் ரூ.30 கோடி செலவில் மறுக்கட்டமைப்பு செய்யப்படும். இசைப்பள்ளி மாணவர்கள் கல்லூரி உயர் படிப்புகளில் சேர்க்கை பெறும் வகையில் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் அளிக்கபடும்

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்