இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழகம் முழுக்க மாணவர்கள் தங்கள் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். குறிப்பாக சிவகங்கை மாவட்டம் சிறந்த தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 98.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் 34வது இடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும். சென்னையில் 90.73% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. சென்னை மட்டுமின்றி சென்னை அருகே உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்திலும் தேர்ச்சி விகிதம் குறைவு.