மின் இணைப்புடன் ஆதார் இணைக்க பணம் வசூலித்ததால் கடும் நடவடிக்கை- மின்சார வாரியம்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (14:59 IST)
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கும் அறிவிப்பை சமீபத்தில் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

மின்கணக்கீடு மற்றும் கட்டண முறையை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘’மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் வரும் 28 ஆம் தேதி  முதல் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆதார் இணைக்க பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து,  மின்சார வாரியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ALSO READ: மின் கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த மின்சார வாரியம் முடிவு! பொதுமக்கள் அதிர்ச்சி
 
அதில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து,  பிளக்ஸ் போர்டு வைத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலை 10:30 முதல் மாலை 5:15 வரை உணவு, தேனீர் இடைவேளையின்றி பணியாற்ற வேண்டும் என்றறும், மாற்று ஏற்பாடாக கணினியை தயர் நிலையில் வைத்திருக்க வேண்டுமென கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்