ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேர் கைது!

திங்கள், 28 நவம்பர் 2022 (21:37 IST)
டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேதுறை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டிய   நாகை தொகுதியில் இன்று போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

டெல்டா பகுதிகளை தெற்கு ரயில்வேதுறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, எனவே, வரும் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படு என்று, இதற்கு, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், ரயில்மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று  கடந்த 24 ஆம்தேதி தெரிவித்திருந்தார்.

ALSO READ: நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் - எம்பி செல்வராசு அறிவிப்பு
 
அதன்படி, திருவாரூர்- காரைக்குடி வழியே விரைவு ரயில்சேவையை தொடங்க வேண்டும் , முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என 32 கோரிக்கைகளை முன்வைத்து, இன்று திருவாரூரில் 3 இடங்களில் காலையில் திமுக கூட்டணிகளாக கம்யூனிஸ்டு, விசிக, உள்ளிட்ட  கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதில், எம்பி செல்வராசு, எம்.எல்.ஏக்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து உள்ளிட்ட சுமார் 1000 பேரை போலீஸர் கைது செய்துள்ளனர்.

 

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்