இந்த நிலையில், ஆதார் இணைக்க பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, மின்சார வாரியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து, பிளக்ஸ் போர்டு வைத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலை 10:30 முதல் மாலை 5:15 வரை உணவு, தேனீர் இடைவேளையின்றி பணியாற்ற வேண்டும் என்றறும், மாற்று ஏற்பாடாக கணினியை தயர் நிலையில் வைத்திருக்க வேண்டுமென கூறியுள்ளது.