சிக்கன் பிரியாணியில் நீட்டி நெளிந்த புழுக்கள் : வாடிக்கையாளர் அதிர்ச்சி

செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:43 IST)
சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள பிரபல உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடும் போது, அதில் புழுக்கள் இருந்ததாக புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள பிரபல உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடும் போது அதில் நீட்டி நெளிந்தபடி புழுக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
பின்னர், இதுகுறித்து அந்த உணவக நிர்வாகியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கு உணவகம் தரப்பில் எதுவும் உரிய விளக்கம் அளிக்கவில்லை என தெரிகிறது.  இதனையடுத்து அவர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உணவைப் போட்டோ எடுத்து அதை உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளர்.
 
இந்நிலையில் உணவகம் தரப்பில் கூறியுள்ளதாவது, சிக்கனில் புழு இருந்ததற்கு கோழியை விற்ற கடைக்காரரே காரணம். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்