இதனைதொடர்ந்து கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், முழுமையாக நிரப்பப்படாத படிவத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம் எனவும் தமிழிசை வழக்கு தொடுத்தார்.
இதனையடுத்து சமீபத்தில் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டதும், தெலுங்கானா ஆளுநராக இருப்பதால் வழக்கை தொடர விருப்பமில்லை என கூறி கனிமொழி வெற்றி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
ஆனால், இந்த வழக்கை நடத்துவதா வேண்டாமா என அக்டோபர் 14 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழிசை தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் கனிமொழி எந்த சிக்கலும் இன்றி தனது பதவியில் தொடர்வார் என்பது தெளிவாகியுள்ளது.