தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள் , மோட்டார் வண்டிகள் ஊர்வலம் ஆகியவை 11 பிப்ரவரி 2022 வரை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படும்.
தேர்தல் நடவடிக்கைகளின் போது, அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும், பொதுமக்களும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான நடத்தை முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைகளை இணக்கமாக கடைபிடிப்பதை உறுதிசெய்தல் வேண்டும்