பூட்டை உடைத்து சரக்கை திருடிய கும்பல்: திருவள்ளூரில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (09:15 IST)
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மர்ம கும்பல் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால் மது விரும்பிகள் பலர் கூட்டம் கூட்டமாக வந்து மதுப்பாட்டில்களை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு திருவள்ளூர் அருகே உள்ள கும்மிடிபூண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் ஒன்றின் பூட்டை உடைத்த மர்ம கும்பல், அங்கிருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுப்பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதுகாப்பற்ற டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுப்பாட்டில்களை குடோன்களுக்கு கொண்டு செல்ல டாஸ்மாக் நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்