கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திருட்டு.. ஒடிசாவை சேர்ந்த ஒருவர் கைது..!

Mahendran

வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (11:39 IST)
கோயம்பேடு பேருந்து பணிமனையிலிருந்து காணாமல் போன திருப்பதி செல்லும் அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கோயம்பேடு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென காணாமல் போனதை கண்டு, பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் அதிர்ச்சி அடைந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பேருந்தை நிறுத்தி வைத்திருப்பதாக ஆந்திர காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
 
இதையடுத்து, பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தமிழக காவல்துறையினர் நெல்லூர் விரைந்து சென்றுள்ளனர். அங்கே, பேருந்தை ஓட்டி சென்ற நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஒடிசாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அந்த பேருந்தை தமிழகக் காவல்துறையினர் மீட்டதுடன், அந்த நபரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Edoted nu Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்