ஜெயின் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பு தங்கக்கலசம் திருட்டு.. சில மணி நேரத்தில் திருடன் கைது..!

Siva

திங்கள், 8 செப்டம்பர் 2025 (14:08 IST)
டெல்லியில் செங்கோட்டை அருகே நடைபெற்ற ஒரு மத நிகழ்ச்சியில், சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க கலசம் திருடு போனது தொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
செப்டம்பர் 3-ஆம் தேதி செங்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில், ஜைன சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த மத நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
திருடு போன பொருட்களில், சுமார் 760 கிராம் எடையுள்ள தங்க கலசமும், வைரம், மாணிக்கம், மரகதம் போன்ற கற்கள் பதிக்கப்பட்ட ஒரு சிறிய கலசமும் அடங்கும்.
 
இந்த தங்க கலசத்தை, சுதிர் ஜெயின் என்ற தொழிலதிபர் நிகழ்ச்சிக்காக கொண்டு வந்ததாக கூறப்படும் நிலையில் நிகழ்ச்சி மேடையிலிருந்து தங்கக்கலசம் திருடு போனது என்றும், அதன்பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
காவல்துறை நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருட்டு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்