இந்தியாவின் 15-வது துணை குடியரசுத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசுத் தலைவர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவி ஏற்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், 51 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாகப் பொதுவெளியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்படப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.