சிக்கன் சமைக்க வேண்டாம்.. மனைவி பேச்சை கேட்காத கணவர்.. பரிதாபமாக பலியான உயிர்..!

Mahendran

வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (11:33 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில், கணவன் மதுபோதையில் சிக்கன் சமைத்து சாப்பிட்டதால், ஆத்திரமடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான நிகாம் என்பவர், ரீனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். நிகாம் அசைவம் சாப்பிடும் பழக்கம் கொண்டவர். ஆனால், ரீனா சைவ உணவு பழக்கம் கொண்டவர்.
 
சம்பவம் நடந்த அன்று, நிகாம் மதுபோதையில் சிக்கன் வாங்கி வந்துள்ளார். சிக்கன் சமைக்க வேண்டாம் என ரீனா பலமுறை வற்புறுத்தியும், நிகாம் அதை பொருட்படுத்தாமல் சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமும் மன உளைச்சலும் அடைந்த ரீனா, அன்று இரவு தற்கொலை செய்து கொண்டார்.
 
மறுநாள் காலை போதை தெளிந்து எழுந்த நிகாம், ரீனா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பயத்தின் காரணமாக, அவர் தனது மனைவியின் சடலத்தை அருகிலிருந்த ஆற்றின் கரையில் புதைத்துள்ளார்.
 
சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிகாம் மற்றும் அவரது உறவினர்கள் இருவரை கைது செய்துள்ளனர். ரீனாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்