தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்தது. மேலும் இன்று முதல் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் தளர்வுகள் எதுவும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பால் மருந்து பொருள்கள் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் ஹோட்டல்கள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக்கூடாது என்றும் குறிப்பாக காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள் சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் தோட்டக்கலைத்துறை மூலம் நேரடியாக விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 க்கும் மேலான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் வினியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் பெரிய மளிகை கடைகளில் போன் மூலம் ஆர்டர் செய்தால் பணியாளர்கள் மூலம் 6 மணி முதல் 10 மணி வரை டோர் டெலிவரி செய்யலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பார்சல் மட்டும் அனுமதி உண்டு என்றும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த நேரங்களில் மட்டுமே ஹோட்டல்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக்கூடாது என கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது