திட்டமிடாத திடீர் அறிவிப்பு: 2 வார லாக்டவுன் வேஸ்ட் என சமூக ஆர்வலர்கள் கவலை!

ஞாயிறு, 23 மே 2021 (12:00 IST)
திட்டமிடாத திடீர் அறிவிப்பு: 2 வார லாக்டவுன் வேஸ்ட் என சமூக ஆர்வலர்கள் கவலை!

தமிழக அரசின் திட்டமிடாத திடீர் அறிவிப்பு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக அமல்படுத்திய லாக்டவுன் வேஸ்ட் என சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர் 

 
வரும் திங்கள் முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் ஒரு வாரம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காய்கறிகள் மளிகை பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் இன்று கடைகளில் குவிந்து வருகின்றனர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒரு சிலர் மாஸ்க் அணியாமல் இருப்பது கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவும் அபாயத்தை எட்டியுள்ளது
 
ஒரு வாரம் லாக்டவுன் நீடிப்பது சரியான முடிவுதான் என்றாலும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் தினமும் ஒரு சில மணி நேரத்திற்கு அனுமதித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்திற்கு இரண்டு நாள் என்றாவது திறக்க அனுமதித்து இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு திட்டமிடாமல் செயல்பட்டதால் தான் தற்போது நேற்றும் இன்றும் குவியும் கூட்டம் காரணமாக கொரோனா மிகப்பெரிய அளவில் தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். சென்னை உள்பட பல பகுதிகளில் மக்களின் கூட்டத்தை பார்க்கும் போது அது உண்மை என எண்ணத் தோன்றுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்