திருமங்கலம் பார்முலாவை கொண்ட திமுகவினர் ஜனநாயகம் குறித்து பேசுவதா? அண்ணாமலை கண்டனம்..!

Siva

திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (16:39 IST)
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திருமங்கலம் ஃபார்முலாவுக்கு பெயர்போன திமுக தலைவர் ஸ்டாலின் ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையானது என்று கூறியுள்ளார். 
 
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின், பாஜக தேர்தல் ஆணையத்தை தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அண்ணாமலை கூறியதாவது:
 
ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக, அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வாக்குகளைத் திருடி வென்றீர்களா?' என்று கேட்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் தோல்வியடைந்ததாக கூறும் மகாரேவபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நான்கு முறை தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
நாளுக்கு நாள் பொய்களை சொல்லி, பிறகு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வது மற்றும் மானமின்றி சுற்றித் திரிவதையே ராகுல் கொள்கையாக கொண்டுள்ளார். அப்படிப்பட்டவருக்கு ஆதரவாக வருபவர், பொய்களை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சியின் தலைவர். இது ஒரு மோசமான கூட்டணி" என்று விமர்சித்துள்ளார்.
 
வாக்குத் திருட்டுக்கு மிகவும் பிரபலமான திமுகவின் திருமங்கலம் ஃபார்முலா" என்று கூறிய அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களை கால்நடைகளைப் போல அடைத்து வைத்து, இறுதியில் கொலுசு, பாத்திரங்கள், குக்கர் போன்ற பொருட்களை கொடுத்ததை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் ஃபார்முலா என்று குறிப்பிட்டதுடன், இப்படிப்பட்டவர்கள் ஜனநாயகம் குறித்துப் பேசுவது வேடிக்கை என்றும் கூறியுள்ளார்.
 
இந்த "வெற்று நாடகங்களுக்குப் பதிலாக", முதல்வர் ஸ்டாலின், ராகுலுக்கு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரியின் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அண்ணாமலை கூறினார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்