கேலி பேசுவது ஸ்டாலின் வேலையாக உள்ளது - எம்.பி.ரவீந்திரநாத் குமார்

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (17:37 IST)
தேனி மக்களவை எம்.பி.ரவீந்திரநாத் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் R.P.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு அறிவித்துள்ள 144 ஊரடங்கு தடையை முழுமையாக பின்பற்றி கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்த ஆய்வு கூட்டம் சமூக இடைவெளி பின்பற்றி இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்போது தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் பேசியதாவது:

தேனி மக்களவை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதி உள்ளது சோழவந்தான் தொகுதியில் தான் கொரோனா தொற்று பரவவில்லை வாழ்த்துக்கள் என்றார்.

வளர்ச்சியடைந்த நாடுகள் கொரோனா பாதிப்பிலிந்து மீள முடியவில்லை இறப்பு விகிதம் அதிகமாகி கொன்டே போகிறது.

ஆனால் இந்திய நாட்டில் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு அமல்படுத்தி கோரோனா பாதுகாப்பை பலபடுத்தி கொரோனா பரவாமல் தடுப்பதற்கு முழுக்கு போட்டார்.

எதிர்கட்சி தலைவர் அம்மா உணவகத்தில் சாப்பாடு வழங்குவதை கொச்சைபடுத்தி வருகிறார். அம்மா கொண்டு வந்த உன்னதமான திட்டம் ஏழை ,எளிய மக்கள் பயன் பெறும் அம்மா உணவகம்அந்தந்த பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகத்தை மாவட்ட செயலாளர்கள், MLA , அமைச்சர்கள் பொறுப்பேற்று இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர் இதை கேலி பேசுவது ஸ்டாலின் வேலையாக உள்ளது என்றார்

வருவாய் துறை அமைச்சர் Rp.உதயகுமார் பேசியதாவது:

மே 3 ம் தேதி வரை தடைகள் தொடரும் மக்கள் அதை கடைபிடிக்க வேண்டும். 3ம் தேதிக்கு பிறகு நோய் தொற்று வீரியத்தை பொறுத்து மருத்துவ குழுவினர் ஆராய்ந்து முதல்வருக்கு அறிக்கை தருவர் அதனடிப்படையில் அடுத்த அறிவிப்பு வெளிவரும்.

பத்திரிக்கையாளர்கள், ஊடகம், செய்தியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தங்களது பணியை தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்