ரஜினியிடம் பாசக் கரம் நீட்டிய ஸ்டாலின் : அரசியல் கூட்டணியா ....?

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (12:14 IST)
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் சிலை திறப்பு நேற்று சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, அ.இ.கா.த. ராகுல் காந்தி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், தி.முக செயலர் அன்பழகன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆகமொத்தம் பாசத்தலைவருக்கான ஒரு பாராட்டு விழாவைப்போல கருணாநிதியின் சிலை திறப்பு விழாவும் மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
 
இதில் முக்கியானது என்னவென்றால், சில மாதஙகளுக்கு முன் திமுகவின் முரசொலி நாளிதழில் ரஜினியை விமர்சித்து எழுதியது எல்லோருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
அதன் பின் அந்தக் கட்டுரை எழுதிய ஆசிரியர் நேரில் சென்று ரஜினியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார், இது நாளேடுகளில் பரவலாக மக்கள் கவனம் பெற்றது.
 
இதனையடுத்து ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதால் அவர் மீது திமுக தொடுக்கும் வார்த்தை அம்பாகவே அந்த விமர்சனம் பார்க்கப்பட்ட நிலையில் ரஜினிக்கு எதிராக திமுக இருக்கும் என்று கூட அரசியல் வல்லுனர்கள் கணித்தனர். இதற்கு முக்கிய காரணம் ரஜினிதான்! ’ஒரு பேட்டியில் பத்து ஆட்கள் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் அந்த ஒருவர் தானே பெரியவர் ’என்று மோடிக்கு ஆதரவு தெரிவித்தார். இது பாஜக தொண்டர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.அதனால் ரஜினி பாஜகவில் தான் ஐக்கியமாவார் என கூறப்பட்டது.
 
ஆனால் நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவி, காங்கிரஸ் தலைதூக்கியதால் பாஜக துவண்டு போயிருக்கும் வேளையில் தேர்தல் பற்றி ரஜினி செய்தியாளர்களிடம் கருத்து கூறும் போது ’பாஜக செல்வாக்கு இழந்து விட்டது ’என்று கூறினார்.
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி  சிலை திறப்பு விழாவில் ரஜினி நட்புடன் பங்கேற்றார். அப்போது ரஜினி அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்த ஸ்டாலின் ரஜினியின் கரம் பிடித்து தன் அன்பை பரிமாறினார்.இந்தக் கைகள் அரசியலிலும் இணையுமா...? அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு வழிவகுக்குமா என இப்போதே அரசியல் விமர்சகர்கள் கணக்குப்போட ஆரம்பித்து விட்டார்கள்.
 
இவ்விழாவில் கருணாநிதியின் தோளில் சாய்ந்து விளையாடி அரசியல் பாடம் பெற்ற அவரது மாணவன் என்று சொல்லிகொள்ளும் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்