திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் எழும்பூர், துறைமுகம் உட்பட பல தொகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பொது மக்களுடன் இணைந்து வீதிகளில் சுற்றி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் பொது மக்களிடம் உறையாடினார். சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் கே.பி.கார்டன் அருகில் கோயில் வாசல் அருகே திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு கோயில் குங்குமம் நெற்றியில் வைக்கப்பட்டது.
கோயில் குங்குமம் ஸ்டாலினின் நெற்றியில் வைக்கப்பட்ட அடுத்த சில நொடிகளிலேயே அவர் அந்த குங்குமத்தை அழித்து விட்டார். இதனால் அங்கு சில சலசலப்பு ஏற்பட்டது.
நன்றி: News7
மதம் கிடையாது, கடவுள் கிடையாது என்று பகுத்தறிவு பேசும் திமுக சமீபகாலமாக அதன் கொள்கைகளை மறந்து மதம் போன்ற வழிபாடுகளில் கவனம் செலுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே திமுக பொருளாளர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்து, பின்னர் அது அவரது அனுமதி இல்லாமல் போடப்பட்டது என கூறி நீக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது நமக்கு நாமே பயணத்தின் போது கோயில்களுக்கு சென்றதும் விமர்சிக்கப்பட்டது. தற்போது அவர் கோயில் குங்குமத்தை நெற்றியில் வாங்கிவிட்டு, பின்னர் உடனடியாக அதை அங்கேயே அழித்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.