வீட்டிற்குள் இருந்த தலித் பெண் வெளியே இழுத்து வந்து நிர்வாணமாக்கி சித்ரவதை

Webdunia
வியாழன், 12 மே 2016 (14:50 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சொத்து தகராறினால் தலித் பெண்ணை ஆடையில்லாமல் அழைத்து வந்து சித்தரவதை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

 
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹரேவா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிரிவினர் சொத்து தகராறினால் ஏற்பட்டுள்ளது.
 
இந்த பிரச்சனை காரணமாக தலித் பெண்ணை குடும்பத்தினர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து இரும்புக் கம்பிகளாலும், குச்சிகளாலும் தாக்கியுள்ளனர்.
 
மேலும் அவர்களால் அந்த பெண்ணின் ஆடை முழுவதையும் கழற்றி  சித்ரவதை செய்திருக்கின்றனர். இச்சம்பவம் குறித்து உள்ளுர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 
அடுத்த கட்டுரையில்