தேர்தல் தேதியை மாற்றிக் கூறிய ஸ்டாலின்

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (23:42 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கரூருக்கு நேற்று மாலை வந்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது எப்போதும் போலவே தேதியினை மாற்றி கூறி வரக்கூடிய தேர்தல் வரும் மே மாதம் என்று கூறி, கேமிராவினை பார்த்து மீண்டும் ஏப்ரல் 6 ம் தேதி என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி என்று கூறியவுடன், மஞ்சள் கலரில் டீ சர்ட் அணிந்திருந்த ஒரு நபர் தனது தலைவர் (திமுக தலைவர்) ஸ்டாலினுக்கு கை அசைக்க எழுந்துள்ளார். இந்நிலையில் கரூர் திமுக வேட்பாளரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி அந்த நபரை தாக்கி, கீழே தள்ளி விடும் காட்சி தற்போது வைரலாகி வருவதோடு, அந்த காட்சிகள் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பெயரில் இயங்கும் செந்தில்பாலாஜி senthilbalaji மற்றும் mk stalin ஆகிய youtube channel களிலேயே தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது திமுக வினரிடையே மிகுந்த அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு கட்சியின் தலைவர் முன்னரே திடீரென்று மாவட்ட பொறுப்பாளர் பதவி வாங்கி, அவரே திமுக வேட்பாளராகவும் போட்டியிடும் பட்சத்தில் உண்மையான உடன்பிறப்புகள் ஒரு புறம் முகம் சுழிக்க வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்