திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூளை வெளியிட்டு பேசிய ஸ்டாலின் மிசா சர்ச்சைக் குறித்து ஆவேசமாகப் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டத்தின் திமுக வின் கோட்டையாக வைத்திருந்தவர் மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அவரிம் வாழ்க்கை வரலாற்று நூலான , ‘திராவிட இயக்கத்தில் என் பயணம்’ இன்று சேலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் ‘தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு பெயர் இருந்தாலும் சேலத்தை நாங்கள் வீரபாண்டி மாவட்டம் என்றுதான் அழைப்போம். அந்த அளவுக்கு வீரபாண்டியார் சேலம் மாவட்டத்தை தன் கைக்குள் வைத்திருந்தார். ஸ்டாலின் மிசாவில் இருந்தாரா என்று விவாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்தவனா என்று எந்த முட்டாளாவது கேட்பானா ?. அப்படி ஒரு முட்டாள் தனமான விவாதம்தான் மிசா வழக்கு பற்றியும் நடந்து கொண்டிருக்கிறது.
நான் சென்னை சிறையில் இருந்தேன் என்றால் அண்ணன் வீரபாண்டியார் சேலம் சிறையில் இருந்தார். பின் மதுரைக்கு மாற்றப்பட்டார். இந்த நூலைப் போல 100 திமுக முன்னோடிகள் நூலை எழுதினால் அதுதான் திராவிட இயக்க வரலாறாக இருக்கும்’ எனக் கூறினார்.