ஜெயகுமார் அமைச்சர் வேலையை மட்டும் பார்த்தால் நல்லது: ஸ்ரீபிரியா

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (12:05 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகியதை அடுத்து நடிகை ஸ்ரீபிரியாவும் விலகவுள்ளதாக வதந்திகள் பரவியது. இதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜெயகுமார், 'தன் சொந்தக் கட்சியில் இருக்கும் 16 பேரையே கட்டிக்காக்க முடியாத கமல்ஹாசனால் தமிழ்நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்?'' என்று கிண்டலாக கூறினார்.
 
அமைச்சரின் இந்த கருத்து கூறிய நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமுகருமான ஸ்ரீபிரியா கூறியதாவது: 'அமைச்சர் ஜெயகுமார் தன்னுடைய அமைச்சர் வேலையை மட்டும் பார்த்தால் நல்லது .எந்த கட்சியில் யார் சேரப்போகிறார்கள், யார் விலக போகிறார்கள் என்ற தகவல் அவருக்கு எதற்கு? நான் எப்போது கட்சியில் இருந்து விலகபோவதாக கூறினேன். இது ஊடகங்களில் இருந்து வந்த தகவலா? அல்லது அவரே கிளப்பிவிடும் கதையா?
 
மக்கள் நீதி மய்யம் நான் விரும்பி ஏற்று கொண்ட கட்சி. இதற்கு முன்னர் பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தும் நான் சேரவில்லை. மக்களுக்கு ஏதாவது நேர்மையாக செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன்  வந்திருந்ததால் இந்த கட்சியில் இணைந்தேன்
 
மேலும் ஒரு அமைச்சராக இருப்பவர் ஒரு கட்சியில் இருந்து ஒருவர் விலகுகிறாரா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளாமல் பேட்டி அளிப்பது அவருடைய பொறுப்பின்மையை வெளிப்படுத்துகிறது என்றும் ஸ்ரீபிரியா கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்