
விஜய் தங்களை சந்திக்க கரூர் வராததற்கு கண்டனம் தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண், தவெக தலைவர் விஜய் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த விஜய் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். மேலும் விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் வரலாற்றிலேயே முதல்முறையாக பாதிக்கப்பட்டவர்களை பஸ்ஸில் ஏற்றி தனது பண்ணை வீட்டிற்கு வரச் செய்து சந்தித்துள்ளார் விஜய். இதற்காக முதல் நாளே கரூரில் இருந்து அழைத்து வரப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட மக்கள் விஜய்யிடம் ஆறுதல் பெற்றுச் சென்றனர்.
இது கூட்டநெரிசலில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவியை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் செய்வது தவறு என கூறியுள்ள அவர், விஜய் கரூருக்கு வந்து தங்களை சந்திக்க வேண்டும் என்றும், அப்படி சந்திக்காவிட்டால் அவரது ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தங்களுக்கு தேவையில்லை என்றும் கூறி பணத்தை திரும்ப அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K
