தலைமை செயலாளரின் உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்? பெரும் சர்ச்சை..!

Siva

திங்கள், 13 மே 2024 (13:27 IST)
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தலைமை செயலாளரின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
தமிழக அரசின் உத்தரவை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும், கடும் வெப்பம் நிலவும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்தவித பயிற்சியோ, சிறப்பு வகுப்புகளோ நடத்த கூடாது என தலைமை செயலாளர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவை, பள்ளி கல்வித்துறையே மீறுவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சிறப்பு வகுப்புகள் தொடர்பாக, பல்வேறு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் ஆடியோ செய்தியும் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்