திட்டமிட்டபடி பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகுமா? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

Siva

செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (08:13 IST)
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவு அடைந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகுமா? என்பது குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே பத்தாம் தேதியும்,  பன்னிரண்டாம்  வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி அதே தேதியில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் பொது தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என்ற தகவல் பொய்யானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மக்களவைத் தேர்தல் காரணமாக பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் தேர்வு தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகள் அறிவிப்பில் எந்த விதமான தாமதமும் இருக்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எனவே மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என்பது பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு காரணமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்