திருவண்ணாமலை தீபத்திருவிழா: சென்னையில் இருந்து 50 குளிர்சாதன பேருந்து இயக்கம்.!

திங்கள், 20 நவம்பர் 2023 (18:54 IST)
திருவண்ணாமலையில் தீப திருவிழா நடைபெற உள்ளதை அடுத்து சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் 50க்கும் மேற்பட்ட குளிர்சாதன  சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  

திருவண்ணாமலை தீபத்திருநாளை முன்னிட்டு  பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று தினங்களில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் 50 எண்ணிக்கையில் குளிர்சாதனம் உள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாகவும் இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் நவம்பர் 24 முதல் 26 ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றும் தமிழக அரசு போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மாற்றம் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்