கடந்த ஆண்டு 30 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தீப திருவிழாவை காண வந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அமைச்சர் சேகர்பாபு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கார்த்திகை தீப திருவிழாவுக்கு விஐபி பாஸ் வழங்க முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறியுள்ளார்.