பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யாராவது பேசினால் உடனடியாக பொங்கி எழும் மகளிர் அமைப்புகள் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு என தனி மதுபார் தொடங்கப்பட்டிருந்த செய்தி வெளியான நிலையில் மகளிர் அமைப்புகள் மெளனமாக இருப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பார்ட்டி மற்றும் பார்களில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் மது அருந்தி வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் மதுரையில் பெண்களுக்கு என தனியாக புதிய மதுபார் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை விஷால் தி மாலில் பெண்கள் மது அருந்த சிறப்பு வசதிகளுடன் புதிய மதுபார் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் மதுரை மக்களிடையே இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பினாலும் தற்போது அந்த மதுபாருக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒருபக்கம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் பெண்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மதுபாருக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.