நீட் விலக்கு மசோதா - விரைவில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்!!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (11:44 IST)
நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். 

 
நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் புறக்கணித்த நிலத்தில் திமுக, காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் பங்கேற்றன. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக, விசிக, மதிமுக, மமக, தவாக, கொமதேக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என தெரிகிறது. வரும் 9 ஆம் தேதி கூட்டத்தை கூட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்