யூடியூப் சேனல் மூலம் ரூ.5 கோடி மோசடி செய்த பெண்: வீட்டின் முன் குவிந்த பொதுமக்கள்

புதன், 15 டிசம்பர் 2021 (06:57 IST)
யூடியூப் சேனல் மூலம் ரூபாய் 5 கோடி மோசடி செய்த பெண் ஒருவரின் வீட்டின் முன் பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வீட்டிலிருந்தே பெண்கள் கை நிறைய சம்பாதிக்கலாம் என யூட்யூபில் விளம்பரம் செய்த சூளுரை சேர்ந்த ஒரு பெண்ணின் விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் அவரிடம் பணம் கட்டியுள்ளனர் 
 
சூலூரை சேர்ந்த கோதை நாச்சியார் என்ற பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சேனலில் வீட்டிலிருந்தபடியே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் அதற்கு பயிற்சி வழங்குவதாக கூறி கட்டணம் என்ற பெயரில் அவர் பணம் வசூலித்துள்ளார்.
 
இவ்வாறு அவர் 5 கோடி வரை வசூலித்ததாக தெரிகிறது. ஆனால் எந்தவிதமான சுய தொழில் பயிற்சியும் அவர் கொடுக்கவில்லை. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கோதை நாச்சியாரின் வீட்டை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கோதை நாச்சியார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்