காசு தர மறுத்த தாயை உயிருடன் கொளுத்திய மகன்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (15:21 IST)
சென்னை திரிசூலம் பகுதியில் காசு கொடுக்க மறுத்த தாயை, மகன் தீயிட்டு எரித்து கொலை செய்துள்ளார்.


 

 
சென்னை திரிசூலம் வேலுத்தாயி(38) என்பவர் சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணியாளராக இருந்து வந்தார். அவரது கணவன் முருகன் தினக்கூலியாக வேலை செய்கிறார். அவர்களுக்கு 3 குழந்தைகள். மூத்தவன் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். 
 
இரண்டாவது மகன் சுரேஷ் பிளஸ்-2 தோல்வியடைந்து எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தார். இவர் அடிக்கடி தாயிடம் வந்து காசு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். 
 
அதுபோன்று சம்பவதன்று வழக்கம் போல தாயிடம் காசு கேட்டுள்ளார். தாய் காசு கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் மீது மண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளார்.
 
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கணவன் மற்றும் இளைய மகன் வேலுத்தாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இதையடுத்து காவல் துறையினர் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.   
அடுத்த கட்டுரையில்