10ஆம் வகுப்பு தேர்வு ரத்தால் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்கள்!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (08:01 IST)
10ஆம் வகுப்பு தேர்வு ரத்தால் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்கள்!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீதமும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் கவனம் செலுத்தாமல் முழு ஆண்டுத் தேர்வுக்கு அதிக கவனத்துடன் படித்த மாணவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அவர்களுக்கு அதிகபட்சமாக பாஸ் மார்க் மட்டுமே வழங்கப்படும் என்பதால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த மதிப்பெண்களை தலைமையாசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளதால் இதில் தவறு நடக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் மதிப்பெண் வெளிப்படையான முறையில் அளிக்கப்பட வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் பத்தாம் வகுப்பு தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களை பொறுத்துதான் பன்னிரண்டாம் வகுப்பில் எந்த குரூப் எடுப்பது என்பது என்று முடிவு செய்யப்படும் என்றும் இதிலும் குழப்பம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது 
 
அதேபோல் ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்பதும் நடைமுறை சிக்கல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தெளிவான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்