தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (18:25 IST)
தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் ஒருசில ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது
 
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
அதேபோல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம்  செய்யப்பட்டுள்ளதாகவும், நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்