கல்குவாரி கொலை;ஆட்சியின் மிரட்டலுக்கு பயந்து உடலை பெற்றுக் கொள்கிறோம் என சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு:

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (23:07 IST)
கல்குவாரி கொலை ஐந்து நாட்களுக்கு பிறகு உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் மாவட்ட ஆட்சியின் மிரட்டலுக்கு பயந்து உடலை பெற்றுக் கொள்கிறோம் என சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு:
 
கரூர் மாவட்டம் குப்பம் அருகே  தனியார் ப்ளூ  மெட்டல்ஸ் மற்றும் கல்குவாரி என செல்வகுமார்(45) நடத்தி வந்தார்.
 
இந்நிலையில் கல்குவாரி செயல்படும் கால முடிந்தும் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கனிமவளத்துறையினரிடம் புகார் கொடுத்ததின் பேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனிமவளத்துறை அந்த கல்குவாரியை நடத்த அனுமதி மறக்கப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலையில் காருடையாபாளையம் அருகே ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  அந்த கல்குவாரியின் பொலிரோ வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்,
 
விபத்தை குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டுநர் சக்திவேல்,ராணிப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் என மூவரையும் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்,
 
தொடர்ந்து ஐந்து நாட்களாக கரூர் அரசு மருத்துவமனையில் ஜெகநாதன் உடலை வைக்கப்பட்டது உடலை பெற்றுக்கொள்ள ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கினால் மட்டும் மருத்துவமனையில் எடுத்து செல்லப்படும் என்று அவரது மனைவி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்,
 
 
இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் பங்கு நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் குடும்பத்திற்கு நிவாரணமாகவும் வழங்கினார்,
 
இன்று ஐந்தாம் ஆண்டு நாளாக உடலை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில் சமூக ஆர்வலர் முகிலன் மற்றும் சண்முகம் கைது செய்தனர்,
 
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரது மனைவி ரேவதி மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்,
 
பின்னர் உடலை வாங்கிக் கொள்ள அவரது மனைவி ரேவதி சம்மதம் தெரிவித்தார்,மேலும் கைது செய்தவர்களே விடுவிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பினர் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினர்,
 
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த சமூக ஆர்வலர் குணசேகரன்,
 
 
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மிரட்டலுக்கு பயந்து உடலை பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது,
 
மாவட்ட நிர்வாகத்திற்கு சட்டவிரோத கல் குவாரி கும்பல் அடிக்கும் கொல்லைக்கு எந்த ஒரு கவலையும் இல்லை,மாறாக சமூக ஆர்வலர் மீதும் தான் குற்றச்சாட்டு வருகிறார்கள்,
 
நியாயமான கோரிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் மாவட்ட கரூர் ஆட்சியர் அமைந்திருக்கிறார் என குற்றச்சாட்டு வைத்தார்.
 
பேட்டி 1 : ரேவதி, ஜெகநாதனின் மனைவி.
 
பேட்டி 2 : குணசேகரன் சமூக ஆர்வலர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்