உணவகங்களில் ஸ்மோக்கிங் ரூம் அமைக்க தடை.. மீறினால் 3 ஆண்டு சிறைதண்டனை..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (10:30 IST)
தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஸ்மோக்கிங் ரூம் என்று கூறப்படும் புகை குழல் கூடத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசுதழில் தெரிவித்துள்ளது. 
 
உணவு கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஸ்மோக்கிங்  ரூம்  திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில் தற்போது அரசுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
விதிகளை மீறி ஸ்மோக்கிங் ரூம் அமைத்தால் ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறை தண்டனை என்றும் ரூபாய் 20000 முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
2003 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலை தயாரிப்புகள்,  விளம்பரம் செய்வதை  தடை செய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம் உற்பத்தி செய்தல் வழங்குதல் மற்றும்  விநியோகம் செய்ததை முறைப்படுத்தல் சட்டம் தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்து வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்