இந்தியாவில் முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம்: சென்னையில் அறிமுகம்..!

புதன், 28 ஜூன் 2023 (12:29 IST)
இந்தியாவில் முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் சென்னையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்  புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது.
 
இந்த தொழில்நுட்பத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போது சிக்னலில் எச்சரிக்கை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
முதற்கட்டமாக 16 சிக்னல்களில் 25 ஆம்புலன்ஸ் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும், சென்னையில் 40 சிக்னலில் இந்த சேவையை விரிவுப்படுத்த  திட்டமிட்டப்பட்டுள்ளது என்றும்,சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்