சிங்கப்பூர்- மதுரைக்கு நேரடி விமான சேவை: முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிங்கப்பூர் அமைச்சர்..!

Webdunia
வியாழன், 25 மே 2023 (10:29 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர் நாட்டிற்கு பயணம் செய்த நிலையில் அங்கு அவர் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். 
 
மேலும் ஒரு சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாகவும் தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம்அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது  சிங்கப்பூர்- மதுரைக்கு நேரடி விமான சேவை வழங்க சிங்கப்பூர் உள்துறை அமைச்சர்கோரிக்கை விடுத்தார்,
 
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்  மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதாகவும் தெரிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்