விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் பரப்பியதாக கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஆதரவாக சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவி திஷா ரவி என்பவர் க்ரேட்டா தன்பெர்கின் கருத்துகளை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீஸார் திஷா ரவி வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக அவரை கைது செய்துள்ளனர்.
சுற்றுசூழல் ஆர்வலரான திஷா ரவி ஸ்வீடன் சிறுமி க்ரேட்டா தன்பெர்கின் “ப்ரைடே பார் ப்யூச்சர்” என்ற சுற்றுசூழல் அமைப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் திஷா ரவி கைது குறித்து பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த் “திஷாரவிக்கு என் ஆதரவு உண்டு. இது உங்களுக்கு நேர்ந்ததற்கு மன்னிக்கவும் சகோதரி. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். வலுவாக இருங்கள். இந்த அநீதியும் கடந்து போகும்” என கூறியுள்ளார்.