பார்த்திபனின் படத்தில் பாடல் பாடும் ஸ்ருதிஹாசன்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (20:40 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பார்த்திபன். இவர், சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம அனைவராலும் பாராட்டப்பட்டது

இதையடுத்து பார்த்திபனின் அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் இதுபற்றி அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு டி,இமான் இசையமைக்கிறார். திட்டமிட்டுள்ளதாக . படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்துக்கு “Teen” என்று டைட்டில் வைக்க திட்மிட்டுள்ளார் எனக் கூறப்படும் நிலையில், இப்படத்தை பார்த்திபன் தயாரிக்கவுள்ளார் என தெரிகிறது.

இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்து  பார்த்திபனுடன் இணைந்து டி. இமான் இசைப் பணி மேற்கொள்ளும் புகைப்படத்தை சமீபத்தில் தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த நிலையில் இப்படத்தில் டி இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடுகிறார். இதுகுறித்து பார்த்திபன் தன் வலைதள பக்கத்தில்,

‘’நம் படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ருதி சேர்த்தல் சிறப்பென தோன்ற,மூர்த்தி மூலம் கேட்க

மகிழ்வோடு ஒப்புக்கொண்டு நிமிடம் பிசகாமல் வந்தார்.”அம்மா ஹாய் சொல்லச் சொன்னாங்க

அப்போதெல்லாம் அப்பா பிறந்த நாளுக்கு நீங்க குடுக்குற gift-ஐ அம்மாகிட்ட குடுத்து பத்திரமா வைக்க சொல்வாராம்.அம்மாவும் அதை ஆர்வத்தோட பிரிச்சு பாக்க,வந்த giftலயே அது மட்டும் ரொம்ப ஸ்பெஷலா hand made-ஆ இருக்குமாம். அதை ரொம்ப ரசிப்பாங்களாம்”னு சொல்லச் சொல்ல சிறிய மெனகெடலுக்கு பெரிய மெடல் கெடச்சதா உள் சுகம் கண்டது.(7-ஆம் தேதிக்கு ஒரு தேதியே இடையில் - என்ன செய்வது?)

பாடும் ஸ்டைலே சொன்னது ஸ்ருதி பெயர் சரியென்று.அவரின் அற்புத அற்பணிப்பும்,அபார ஞானமும்,மதிக்கும் பண்பும் மிகவும் பிடித்து போனது எனக்கு பிடித்த படைப்பாளியின் மகளை.அப்பாவை பிடிக்க காரணமே தேடவில்லை நான்.எனக்கு சினிமா என்ற பேய் பிடிக்க காரணமானவர் அவராதலால். சரி…

இமானின் சிறப்பான மெட்டுக்கு ஸ்ருதி மிகவும் என்ற வார்த்தையை தன் குரலால் சேர்த்துள்ளார்.

சொல்லும் போது அத்துணையும் புரியாது.

கேட்கும் போது சொல்லுங்க….’’என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்