மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசிய இந்திய மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் சந்தோஷ் என்பவர் இன்று ஆர்.கே.நகரில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் படித்து வந்த சேலம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற மாணவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் மீது இந்திய மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் சந்தோஷ் செருப்பை வீசி தனது எதிர்ப்பை காட்டினார்.
இதனால் போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது இந்திய மக்கள் முன்னணி அமைப்பின் வேட்பாளராக சந்தோஷ் போட்டியிடுகிறார். சந்தோஷ் சிறையில் இருப்பதால் அவரிடம் கையெழுத்து வாங்கி அவருடைய சகோதரர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.