பாலியல் அத்துமீறல்.! மன்னிப்பு கேட்ட வார்டன்..! போராட்டத்தை வாபஸ் பெற்ற மாணவர்கள்.!!

Senthil Velan

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (11:23 IST)
திருச்சியில் பாலியல் அத்துமீறல்  விவகாரத்தில் அநாகரீகமாகப் பேசிய விடுதி காப்பாளர் பேபி, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், நேற்று இரவு முதல் நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
 
திருச்சி என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் இணையதள சேவை வழங்க சென்ற ஒப்பந்த ஊழியர் ஒருவர், அங்கிருந்த மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அறையில் இருந்து வெளியே வந்த அந்த மாணவி, சக மாணவர்கள் உதவியுடன் ஒப்பந்த ஊழியரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து என்.ஐ.டி வளாகத்தில் இரவு முதல் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகவும் கல்லூரி நிர்வாகம் நடத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
 
விடுதி காப்பாளர் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அப்படிதான் நடக்கும் என்று பெண்கள் மீதே குறை கூறியிருக்கிறார். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த திருச்சி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் என்.ஐ.டிக்கு நேரில் சென்று விசாரித்தனர். 


ALSO READ: பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை.! குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - வெறிச்சோடிய துறைமுகங்கள்.!!
 
 
இந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அநாகரீகமாகப் பேசிய விடுதி காப்பாளர் பேபி மன்னிப்பு கேட்டார். அதன்பின்பு போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்