செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி.. அரசியல்வாதி அல்ல: முதல்வர் காட்டம்

Webdunia
திங்கள், 6 மே 2019 (13:15 IST)
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கலைத்து விடலாம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் துடிக்கின்றார் – அந்த கனவு கானல் நீர் போல மாறிவிடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும் அவர் அரசியல்வாதி அல்ல எனவும் முதலமைச்சர் பழனிசாமி காட்டமாக கூறினார். அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி என்று விமர்சனம் செய்தார். 
 
செந்தில் பாலாஜிக்கு இந்த இடைத்தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார். செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும் அவர், அரசியல்வாதி அல்ல எனவும் கூறினார். 
 
 
மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் வேட்பாளர் செந்தில்பாலாஜி தான்; மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக எம்.எல்.ஏவாக நினைக்கிறார் என்றும் தெரிவித்தார். 
 
மேலும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல கட்சி எப்படியோ அப்படி தான் தொண்டனும் இருப்பார் என்பதற்கு உதாரணம் தான் அரவக்குறிச்சி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி என்றார். கரூர் மாவட்ட மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்கள், புதிய மருத்துவக்கல்லூரி, புஞ்சைப்புகளூர் தனி தாலுக்கா, மேலும் அதன் அருகே கதவணை திட்டம், அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு சுமார் 290 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் என்று அடுக்கு அடுக்கான பல நல்லதிட்டங்களை தீட்டி வருவதாக தெரிவித்த முதல்வர், ஆளுகின்ற அ.தி.மு.க ஆட்சியில் இந்த தொகுதியிலும் அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றி பெற்றால் தான் மேலும் பல நல்ல திட்டங்களை தீட்ட முடியும், செந்தில் பாலாஜிக்கு வாக்களித்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றார்.

மேலும், ராகுல்காந்தி கர்நாடகாவில் வாக்குகள் சேகரித்த போது, நான் பிரதமர் ஆனவுடன் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தினை கலைப்பேன் என்று கூறியுள்ளார். 60 வருட கால தமிழர்களின் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம், இதை கலைப்பது என்றால் என்ன ? நமது உணர்வுகளுக்கு மதிக்களிக்காமல் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
 
அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அப்படி பட்டி கட்சியின் வேட்பாளர் தான் இந்த செந்தில் பாலாஜி என்றார். மேலும், ஏற்கனவே முன்னாள் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நிலமில்லா ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார். எத்தனை பேருக்கு இந்த நிலத்தினை வழங்கினார். அதே போல தான், இந்த செந்தில் பாலாஜி 3 செண்ட் நிலத்தினை தருவதாக கூறி வருகின்றார்.

ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றுபவர் தான் இந்த செந்தில் பாலாஜி, ஏற்கனவே ரூ 20 நோட்டை டோக்கன் சிஸ்டமாக ஆர்.கே.நகரில் கொடுத்து ஏமாற்றியவர் தான் இந்த செந்தில் பாலாஜி என்றும், அவருக்கும் தற்போது துரோகம் செய்து விட்டு வந்து விட்டார் என்றார். மதுரையில் மு.க.ஸ்டாலின் பேசிய போது, ஏற்கனவே இருக்கின்ற தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ க்கள் மட்டுமில்லாமல் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்களை சேர்த்து தான் முதல்வராகி விட்டதாக கனவு காண்கின்றார். அந்த கனவு கானல் நீர் போல ஆகிவிடும், மேலும், இந்த 4 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவதாக கூறி வருகின்றார். 
அப்படியே அவர் வெற்றி பெற்று விட்டால் அவர் ஆட்சி அமைத்து விடுவது தானே எதற்காக நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வர முயற்சிக்கின்றார் என்றார். அதே நேரத்தில் மக்கள் தான் முதலமைச்சர்கள் என்றும், நான் ஒரு சாதாரண விவசாயி என்றும், ஆகவே மக்களுக்கு என்றும் நான் (அ.தி.மு.க) அரசு பாடுபட அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்