பதில் சொல்லாம ’அன்னைக்கு காலைல ஆறு மணி’ காமெடி பண்றார்! – செந்தில்பாலாஜி கலாய் ட்வீட்!

புதன், 21 டிசம்பர் 2022 (09:01 IST)
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள வாட்ச் விலை குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் செந்தில்பாலாஜி கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் கடிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி அதன் பில்லை வெளியிடுமாறு அண்ணாமலைக்கு சவால் விடுத்தார். அதற்கு அண்ணாமலை தனது சொத்து விவரங்களையே மொத்தமாக வெளியிட தயாராக இருப்பதாக பேசியிருந்தார்.

இதை தொடர்ந்து இந்த வாட்ச் விவகாரம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வாட்ச் விவரங்களை வெளியிடும்போது, திமுக தலைவர் ஸ்டாலினின் சொத்து விவரங்களையும் வெளியிடுவேன் என பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி “பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்