கணக்குல இல்லாத சொத்து இருந்தா அரசே எடுத்துக்கட்டும்! – அண்ணாமலை சவால்!

ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (12:22 IST)
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு ட்விட்டரில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டரில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் குறித்தும் அதன் விலை குறித்தும் குறிப்பிட்டு அதன் பில்லை காட்ட முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து அதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ஊழல் பற்றி திமுக என்னுடன் விவாதிக்க விரும்பினால் அவர்களை விட அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

நான் அணிந்துள்ள ரபேல் வாட்ச் மே 2021ல் நான் பாஜக தலைவராவதற்கு முன்பே வாங்கப்பட்டது. என்னுடைய வாட்ச் பில், வாழ்நாள் வருமானம், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் என அனைத்தையும் காட்ட நான் தயாராக உள்ளேன். எனது அசையா சொத்து மதிப்புகள் மொத்தமே ரூ.1 லட்சத்திற்குள்தான் அடக்கம். நான் காட்டும் ஆவணங்களை விட என்னிடம் ஒரு பைசா அதிகமாக இருந்தால் கூட அரசு அவ்வளவையும் அரசுக்கு கொடுத்து விடுகிறேன்” என்று பேசியுள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்