அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பணமோசடி புகார்.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (18:27 IST)
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை  அக்டோபர்-31-ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு விசாரணை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 46 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்   இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம். இந்த வழக்கை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களில் சிலவற்றில் விளக்கம் அளிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இடம் கேட்டு நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்