செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (11:47 IST)
செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு விவகாரத்தில் அவரது தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
 
அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த 3வது நீதிபதி, செந்தில்பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்