யாராலும் நாங்கள் மிரட்டப்படவில்லை: ஆளுனர் குற்றச்சாட்டுக்கு துணை வேந்தர்கள் பதில்..!

Mahendran

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:34 IST)
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாள்கள் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை இன்று தொடங்கினார். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
 
பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், மாநாட்டில் பங்கேற்க முடியாது என மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் துணை வேந்தர்களை, சிறப்பு குழுவின் மூலம் மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
 
இதனை எதிர்த்து கூறிய சில துணை வேந்தர்கள், தமிழ்நாடு அரசின் எந்த அதிகாரிகளாலும் நாங்கள் மிரட்டப்படவில்லை என விளக்கினர். மேலும்,  'ஆளுநரின் அழைப்பில் நடைபெறும் மாநாட்டிற்கு நாங்கள் செல்ல விரும்பவில்லை' என தெரிவித்தனர்.
 
மகளின் திருமண காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ரவி, மாநாட்டில் பங்கேற்கவில்லை. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெநாதன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் காரணமாக, அவர்  மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்