தமிழ்நாட்டின் முதலீடு மற்றும் வேலைவாய்புகளை உயர்த்தும் வகையிலான அறிவிப்புகளை இன்று சட்டமன்றத்தில் தொழில் முதலீடு மற்றும் வர்த்தகத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்துள்ளார்.
அமைச்சர் டிஆர்பி ராஜாவின் அறிவிப்புகள்:
தைவான் நாட்டு நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு பயன் தரும் வகையில் சென்னை அருகில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழிற்பூங்கா அமைக்கப்படும். தைவானிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்ப்பதோடு, இதன்மூலம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அமெரிக்கா, தென்கொரியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் சேவைகளுக்காக அந்தந்த நாடுகளில் Guidance Dest அமைக்கப்படும்
நாகப்பட்டிணத்தில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்
தமிழக தொழில்துறையின் உற்பத்தி திறன், வரலாற்று சிறப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் உற்பத்தி பொருட்கள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.
தென்காசியில் சங்கரன்கோவில் வட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு 3000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் வட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு 9000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 2000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா உருவாக்கப்பட்டு 2500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 5000 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சிப்காட் தொழிற்பூங்கா
திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை ஜவுளி ஆடை தயாரிக்கும் தொழில் மையங்களாக உருவாக்கும் விதமாக சிப்காட் டெக்ஸ் பார்க்ஸ் ஏற்படுத்தப்படும்.
காஞ்சிபுரத்தில் பிள்ளைப்பாக்கம், ஒரகடம், வல்லம் வடகால் தொழிற்பூங்கா தொழிலாளர்கள் தங்குமிட தேவைக்கு 2000 படுக்கைகள் கொண்டு தொழிலாளர் தங்குமிடம் உருவாக்கப்படும்.
கும்மிடிப்பூண்டி, மாநல்லூர் மற்றும் தேர்வாய்கண்டிகை தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள ஆலைகளின் பயன்பாட்டிற்காக 22.70 மில்லியன் லிட்டர் மூன்றாம் நிலை மறுசுழற்சி நீர் விநியோக அமைப்பு ரூ.380 கோடியில் அமைக்கப்படும்
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை உருவாக்கப்பட்டு சேமிப்பு கிடங்குகள் அமைப்பது ஊக்குவிக்கப்படும்.
தமிழ்நாட்டு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன்பெறும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் ரூ.10 லட்சம் வரையிலான ஆய்வு கட்டணம் இந்த நிதியாண்டில் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது.
கடல்சார் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதலை ஊக்குவித்து மீனவர்கள் வாழ்வாதாரத்தை பெருக்க கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை 2025 உருவாக்கப்படும்.
தஞ்சை சுற்று வட்டார மீனவர்கள் வாழ்வாதார உயர்வுக்கு கடல்சார் உணவுப் பொருட்கள் பதபடுத்தல் மற்றும் ஏற்றுமதி பூங்கா 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
உலக முதலீட்டாளர்கள் அமர்ந்த இடத்தில் இருந்தபடியே தமிழக தொழிற்பூங்காக்கள், ஆயத்த தொழிற்கூடங்களை பார்த்து சுலபமாக முடிவுகள் எடுக்கும் வகையில் மெய்நிகர் காட்சி பிரதிகள் உருவாக்கப்படும்
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முதலீடு தொடர்பான தகவல்களை பல்வேறு மொழிகளிலும் அளிக்கக்கூடிய புதிய இணையதளம் உருவாக்கப்படும்.
சிப்காட் தொழிற்பூங்காக்கங்களை அழகான தோற்றப் பொழிவுடன் மேம்படுத்த சிறப்பு பிரிவு உருவாக்கப்படும்.
Edit by Prasanth.K